உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்... இந்திய அணிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 2-வது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்...  இந்திய அணிக்கு பின்னடைவு
Published on

புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஒரு இடம் சரிந்து 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 5-வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் ஒரு டிரா என 48.15 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய வங்கதேச அணி, புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 2-வது இடத்திலும் உள்ளன.

இதன் மூலம் இந்திய அணி, அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகள் மட்டுமே இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவை வலுப்படுத்தும்.

Also Read
சவுதி புரோ லீக் - ரொனால்டோ தலைமையில் வரலாறு படைத்த அல் நாசர்... சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்...  இந்திய அணிக்கு பின்னடைவு

இந்த நிலையில், இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com