சவுதி புரோ லீக் - ரொனால்டோ தலைமையில் வரலாறு படைத்த அல் நாசர்... சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

ரொனால்டோ இரண்டு கோல்களை பதிவு செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
சவுதி புரோ லீக் - ரொனால்டோ தலைமையில் வரலாறு படைத்த அல் நாசர்... சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
Published on

ரியாத்,

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரின் கடைசி லீக ஆட்டத்தில் டமாக் எப்சி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அல் நாசர் அணி, சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

ரியாத்தில் உள்ள அல்வவ்வல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

அல் நாசர் அணிக்காக சாடியோ மானே மற்றும் கோமன் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் பதிவு செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதனால் அல் நாசர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அல் நாசர் அணி சவுதி புரோ லீக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும், 2022-ம் ஆண்டு அணியில் இணைந்த ரொனால்டோவுக்கு அல் நாசர் ஜெர்சியில் கிடைத்த முதல் கோப்பையாகவும் இது அமைந்துள்ளது.

Also Read
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கில் - சாய் சுதர்சன் ஜோடி
சவுதி புரோ லீக் - ரொனால்டோ தலைமையில் வரலாறு படைத்த அல் நாசர்... சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

கடந்த சில சீசன்களாக பட்டத்தை வெல்லும் முயற்சியில் போராடி வந்த அல் நாசர் அணி, இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. ரொனால்டோ தலைமையில் கிடைத்த இந்த வரலாற்றுச் சாதனை, அல் நாசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com