உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா?

2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

துபாய்,

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2023-25ம் சீசனுக்கான இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 1-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூலம் 2025 - 2027ம் சீசனுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் தொடங்கவுள்ளது. இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

அதேசமயம் கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு இறுதிப்போட்டியும் இங்கிலாந்தின் ரோஸ் பவுல் மற்றும் ஓவல் மைதாங்களில் நடைபெற்றது. மேற்கொண்டு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 2025-2027ம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான தேர்வில் ஐ.சி.சி இறங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால், இம்முறை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் ஐ.சி.சி இறங்கியுள்ளது. இதனால் இத்தொடரின் 2025-2027ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

எதிவரும் 2025-2027ம் ஆண்டிற்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பி.சி.சி.ஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்திய அணி ஏற்கனவே இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் இரண்டு முறையும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com