

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. ஐந்து அணிகளிலும் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோபி மோலினியூ அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக உருவெடுத்தார். அவரை உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரேவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.75 லட்சத்துக்கு வாங்கியது.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோபி மோலினியூவின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை வாங்குவதற்கு உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி முதலில் ஏலம் கேட்டது. பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் போட்டியில் இணைந்தது.
இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் ரூ.1.10 கோடிக்கு சோபி மோலினியூவை உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்ற இடத்தை அவர் பிடித்தார்.
அடுத்து இந்திய பேட்டர் கிரண் நவ்கிரேவை வாங்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. ரூ.40 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலம் தொடங்கிய நிலையில், இறுதியில் ரூ.75 லட்சத்துக்கு அவரை டெல்லி அணி வாங்கியது.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வீராங்கனையை வாங்கிய அணியாக உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அமைந்தது.
சோபி மோலினியூ – ரூ.1.10 கோடி
ஸ்னே ராணா – ரூ.30 லட்சம்
கிரேஸ் ஹாரிஸ் – ரூ.30 லட்சம்
சுஷ்மா வர்மா – ரூ.30 லட்சம்
ஆஷா சோபனா – ரூ.30 லட்சம்
கேத்ரின் பிரைஸ் – ரூ.10 லட்சம்
மனாலி தக்சிணி – ரூ.10 லட்சம்
சஹானா பவார் – ரூ.10 லட்சம்
மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு வீராங்கனைகளை ஏலத்தில் வாங்கியது.
திஷா கசாத் – ரூ.10 லட்சம்
லதிகா இனாம்தார் – ரூ.10 லட்சம்
பாரதி ராவல் – ரூ.10 லட்சம்
சானிகா சவால்கே – ரூ.10 லட்சம்
ஸ்வேதா செஹ்ராவத் – ரூ.20 லட்சம்
அக்சிதா பகத் – ரூ.10 லட்சம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்கு வீராங்கனைகளைத் தேர்வு செய்தது.
ஜெஸ் ஜோனாசன் – ரூ.40 லட்சம்
தேஜல் ஹசப்னிஸ் – ரூ.30 லட்சம்
பிருந்தா தினேஷ் – ரூ.10 லட்சம்
குளோ டைரன் – ரூ.30 லட்சம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முக்கியத் தேர்வாக கிரண் நவ்கிரே அமைந்தார்.
கிரண் நவ்கிரே – ரூ.75 லட்சம்
உமா காஷ்வி – ரூ.10 லட்சம்
கிர்ஸ்டி கார்டன் – ரூ.10 லட்சம்
நஷ்மா கான் - ரூ.10 லட்சம்
ரூ.40 லட்சம் அடிப்படை விலையைக் கொண்ட கிரண் நவ்கிரேவை ரூ.75 லட்சத்துக்கு டெல்லி அணி வாங்கியது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மூன்று வீராங்கனைகளை வாங்கியது.
ஜி. கமலினி – ரூ.40 லட்சம்
ஓர்லா பிரெண்டர்காஸ்ட் – ரூ.30 லட்சம்
சமைரா ராகவ் – ரூ.10 லட்சம்
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியலில் சோபி மோலினியூ முதலிடத்திலும், கிரண் நவ்கிரே இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சோபி மோலினியூ – ரூ.1.10 கோடி
கிரண் நவ்கிரே – ரூ.75 லட்சம்
ஜி. கமலினி – ரூ.40 லட்சம்
ஜெஸ் ஜோனாசன் – ரூ.40 லட்சம்