27 காலியிடங்கள்... 146 வீராங்கனைகள் - கொச்சியில் சூடுபிடிக்கப்போகும் மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்

இந்த ஏலம் வருகிற 28-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.
மகளிர் பிரீமியர் லீக்
Published on: 

புதுடெல்லி,

கொச்சியில் மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் சூடுபிடிக்கப்போகிறது.

மகளிர் பிரீமியர் லீக்

2027-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் வரும் 28-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 146 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அணிகளில் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்காக அணிகள் போட்டியிட உள்ளன.

46 வீராங்கனைகள்

ஏலப் பட்டியலில் மொத்தம் 119 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 22 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். 97 பேர் இதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீராங்கனைகள்.

வெளிநாட்டு வீராங்கனைகள் பிரிவில் 27 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 14 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்கள். 13 பேர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாதவர்கள்.

27 இடங்களுக்கு ஏலம்

ஐந்து அணிகளிலும் நிரப்பப்பட வேண்டிய 27 இடங்களில், 20 இடங்கள் இந்திய வீராங்கனைகளுக்கும், 7 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஏலம் 28-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.

146 வீராங்கனைகள் 27 இடங்களுக்குப் போட்டியிட உள்ளதால், ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com