2027 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இவைதான் - ஆரோன் பின்ச் கணிப்பு

2027 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆரோன் பின்ச்
Published on: 

மும்பை,

2027 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து ஆரோன் பின்ச் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இப்போதே அதிகரிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

உலகக் கோப்பையைக் கைப்பற்றப்போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு!

ஆரோன் பின்ச்சின் கணிப்பின்படி, 2027 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் முன்னேற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை!

2027 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com