இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்
Published on

கொல்கத்தா,

பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சவுரவ் கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என்பது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, இந்த விவகாரம் என் கையில் இல்லை. இந்தக் கேள்வியை பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் கேட்க வேண்டும்.

நமக்கு இதில் ஆர்வம் இருந்தாலும், சர்வதேச அளவில் மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க அரசுகளின் அனுமதி மிகவும் அவசியம். இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை" என்றார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன்பிறகு இருநாடுகளுக்கு இடையேயான நேரடி தொடர் தற்போது வரை நடைபெற வில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com