

கொழும்பு,
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இளையோர் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக் குட்பட்டோர்) கொழும்பில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 411 ரன்களும், இலங்கை 148 ரன்களும் எடுத்தன. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 208 ரன்களுடன் டிக்ளேர் செய்து 472 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன் னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் டுக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியா 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அத்துடன் ஒரு நாள் தொடரை இழந்ததற்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் ரோகித் யாதவ் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் சி.வெங்கட்டா 3 விக்கெட்டும் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.