ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் தடுமாற்றம்
Published on: 

சார்ஜா,

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது .

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இத்தொடரில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஜிம்பாப்வே 339 ரன்கள்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் சார்ஜாவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 339 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரண்டன் டெய்லர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்தார்.

ஆப்கானிஸ்தான் 159/6

இந்நிலையில், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் அப்சர் சசாய் 33 ரன்களுடனும், நசீர் கான் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசர்பானி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வேவை விட 180 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

X