முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
Published on: 

அபுதாபி,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே 271 ரன்கள் சேர்த்துள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இத்தொடர் நடைபெற்று வருகிறது.

டாஸ்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே , வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே 271 ரன்கள் குவிப்பு

இதையடுத்து, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் எர்வின் அதிகபட்சமாக 93 ரன்கள் குவித்தார். அதேபோல், பிரண்டன் டெய்லர் 81 ரன்கள் சேர்த்தார்.

வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் தஸ்கின் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்கி விளையாட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com