பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

ஹராரே,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 தொடரானது டிசம்பர் 1-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணிக்கு கிரேக் எர்வினும், டி20 தொடருக்கான அணிக்கு சிக்கந்தர் ராசாவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி விவரம் பின்வருமாறு: 

ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜாய்லார்ட் கும்பி, டிரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா,தஷிங்கா முசெகிவா, பிளெஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.

டி20 அணி: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ரியான் பர்ல், டிரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, தஷிங்கா முசெகிவா, பிளெஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகரவா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com