முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முத்தரப்பு கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி
Published on: 

அபுதாபி,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது.

முத்தரப்பு கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையே முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இத்தொடர் நடைபெற்று வருகிறது.

டாஸ்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே , வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே 271 ரன்கள் குவிப்பு

இதையடுத்து, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் எர்வின் அதிகபட்சமாக 93 ரன்கள் குவித்தார். அதேபோல், பிரண்டன் டெய்லர் 81 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் தஸ்கின் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே வெற்றி

இதனை தொடர்ந்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் 33.4 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது.

வங்காளதேச தரப்பில் அந்த அணியின் தொடக்க வீரர் ஹசன் தமீம் அதிகபட்சமாக 46 ரன்களை சேர்த்தார். ஜிம்பாப்வே வீரர் எவன்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com