

ஹராரே,
வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி புலாவாயோ மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஜிம்பாப்வே களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.