இந்தியாவுக்கு எதிரான முதல் இருதரப்பு தொடர்... ஜிம்பாப்வே மகளிர் அணி அறிவிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே மகளிர் அணி, மொத்தம் 6 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஜிம்பாப்வே
Published on: 

ஹராரே,

இந்தியாவுக்கு எதிரான தனது முதல் இருதரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள ஜிம்பாப்வே மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16-ல் டி20 தொடர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே மகளிர் அணி, மொத்தம் 6 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ராய்ப்பூரில் நடைபெற உள்ளன.

இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் வதோதராவில் நடைபெற உள்ளன.

அனுபவம் வாய்ந்த வீராங்கனை

இந்தியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணம் ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு சர்வதேச அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும். இந்நிலையில், ஜோசபின் என்கோமோ தலைமையில் 15 வீராங்கனைகள் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே மகளிர் அணி

ஜோசபின் என்கோமோ (கேப்டன்), பெலவ்ட் பிசா, சிபோ முகேரி-திரிபானோ, கெல்லிஸ் நட்லோவு, மிச்செல் மாவுங்கா, பிரான்சிஸ்கா சிபாரி, ஒலிண்டர் சாரி, குத்ஜாய் சிகோரா, நியாஷா குவான்சுரா, நம்வெலோ சிபாண்டா, லோரின் பிவிரி, சியெட்சா துரூரு, மோடெஸ்டர் முபாச்சிக்வா, டெண்டாய் மாகுஷா, ஷார்ன் மேயர்ஸ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com