கர்நாடகா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபிஎல் டிக்கெட் - டி.கே.சிவகுமார் உறுதி

சபாநாயகர் யு.டி.காதர் துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.
கர்நாடகா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபிஎல் டிக்கெட் - டி.கே.சிவகுமார் உறுதி
Published on

பெங்களூரு,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஐதாராபாத் உள்லிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

சீசனில் முதல் ஆட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து உள்ள நிலையில், பெங்களூரில் நடைபெறும் போட்டிகளை காண ஏதுவாக ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் யு.டி.காதர் துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், “ 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“4 டிக்கெட் எல்லாம் வழங்க முடியாது. நாளைய போட்டிக்கு ஒவ்வொரு எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சருக்கு தலா 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். அடுத்த போட்டிக்கு பார்க்கலாம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com