கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்: காரணம் என்ன ?

சென்னை - லக்னோ அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்: காரணம் என்ன ?
Published on

லக்னோ,

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டியில் சென்னை - லக்னோ அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர். உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தப் பேரிடரில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com