

அகமதாபாத்,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 36வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 66 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.