பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம்

பாகிஸ்தான் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம்
Published on

எட்ஜ்பாஸ்டன்,

எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதிக்கிப்பட்டுள்ளது. நேரச் சலுகைகள் அனைத்தும் கணக்கில் எடுத்த பிறகும், பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 11 ஓவர்கள் குறைவாக வீசியதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைப்படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீச வேண்டிய ஓவர்களை விட எத்தனை ஓவர்கள் குறைவாக வீசுகிறதோ, ஒவ்வொரு ஓவருக்கும் 1 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி குறைக்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கணக்கில் இருந்து 11 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com