நட்புறவு கால்பந்து போட்டி: இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி... 8 கோல்கள் அடித்து ரஷியா அபாரம்

முதல் நட்புறவு ஆட்டத்திலும் ரஷியா 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது.
கால்பந்து
Published on: 

கொல்கத்தா,

இந்தியா - ரஷியா மகளிர் கால்பந்து அணிகள் இடையிலான 2-வது சர்வதேச நட்புறவு ஆட்டத்தில், இந்திய அணி 0-8 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

8 கோல்கள் அடித்த ரஷியா!

கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ரஷிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணியின் தடுப்பாட்டத்தைத் தகர்த்து அடுத்தடுத்து கோல்கள் அடித்த அவர்கள், இறுதியில் 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.

ரஷியா அணியில் டரினா இஷ்முகமெடோவா 21 மற்றும் 42-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மரினே அச்சோயன் 25 மற்றும் 45+1-வது நிமிடங்களில் கோல் அடித்தார். டயானா கிஷ்மகோவா 29-வது நிமிடத்திலும், நடாலியா மஷினா 50 மற்றும் 51-வது நிமிடங்களிலும், எலிசவெட்டா செமெனோவா 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

முதல் நட்புறவு ஆட்டம்

முன்னதாக நடைபெற்ற முதல் நட்புறவு ஆட்டத்திலும் ரஷியா 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. தற்போது 2-வது ஆட்டத்திலும் 8 கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com