விவசாய நிலத்தில் பிரமாண்ட உலகக் கோப்பை ஓவியம்... வைரல்

இந்த புகைப்படம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகக் கோப்பை
Published on

இத்தாலி,

2026 பிபா உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதை கவுரவிக்கும் வகையில், இத்தாலியைச் சேர்ந்த பிரபல கலைஞர் டாரியோ கம்பாரின் விவசாய நிலத்தில் பிரமாண்ட உலகக்கோப்பை உருவத்தை வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

வைரல்

இத்தாலியின் கஸ்டாக்னாரோ பகுதியில், டிராக்டரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வித்தியாசமான கலைப்படைப்பு, வானில் இருந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்பெயின் சாம்பியன்

2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய நிலையில், பரபரப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com