

ஸ்பெயின்,
ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது எதிரணி கோல் கீப்பருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிடி டெனெரிப் அணியின் முன்கள வீரர் ஜெசுஸ் டி மிகுவேல் (30), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்பெயினின் இரண்டாம் நிலை கால்பந்து தொடரில் சிடி டெனெரிப் மற்றும் எப்சி அந்தோரா அணிகள் மோதின. நேற்று (நவம்பர் 2) நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி கட்டத்தில், பந்தைப் பிடிக்க முயன்ற அந்தோரா அணியின் கோல் கீப்பர் ஜெசுஸ் ஓவோனோவும், டெனெரிப் வீரர் ஜெசுஸ் டி மிகுவேலும் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் டி மிகுவேல் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதன் காரணமாக, 2-2 என்ற கோல் கணக்கில் இருந்தபோதே போட்டி நிறுத்தப்பட்டது.
மயக்கமடைந்த டி மிகுவேல் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டி வந்தநிலையில், இன்று (நவம்பர் 3) காலை அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.