ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோ அணியை வீழ்த்தி அல் ஹிலால் சாம்பியன்

இந்த தொடரின் முதல் போட்டியில் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி அணியையும் அல் ஹிலால் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

ரியாத்,

ரியாத் சீசன் கப் கால்பந்து தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ரொனால்டோ தலைமையிலான அல் நசார் அணியும், சல்மான் அல்-பராஜ் தலைமையிலான அல் ஹிலால் அணியும் தகுதி பெற்றன.

அதன்படி நடைபெற்ற இறுதிப்போட்டியில் அல் ஹிலால் 2-0 என்ற கோல் கணக்கில் ரொனால்டோ தலைமையிலான அல் நசார் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அல் ஹிலால் தரப்பில் மில்லின்கோவிக் சாவிக் மற்றும் சலீல் அல்டாவ்சரி தலா ஒரு கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி அணியையும் அல் ஹிலால் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com