பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் !

பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் நீக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் !
Published on

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை தளமாகக் கொண்ட ஸ்பானிஷ் தொழில்முறை கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் ரொனால்ட் கோமேன் நீக்கப்பட்டுள்ளார்.

ரொனால்ட் கோமேன் 6 ஆண்டுகளாக பார்சிலோனா அணியின் வீரராக இருந்தவர். அந்த அந்த அணியின் சாதனையாளராக கருதப்பட்டவர். 1992ம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் வெற்றி கோல் அடித்து சாதனை புரிந்தார். பார்சிலோனா அணி நிர்வாகம் அவரை ஆகஸ்ட் 2020ம் ஆண்டு பயிற்சியாளராக நியமித்தது.

இவரது தலைமையில் கோபா டெல் ரே தொடரை வென்று அசத்தியது. ஏமாற்றமடைந்த லியோனல் மெஸ்ஸியை மீண்டும் உள்ளே கொண்டு வந்தார். ஏமாற்றமடைந்த லியோனல் மெஸ்ஸியை மீண்டும் அணியின் உள்ளே கொண்டு வந்தார்.

இருப்பினும், ரொனால்ட் கோமன் பயிற்சியாளராக இருந்த போது பார்சிலோனா அணி விளையாடிய கடைசி 7 லீக் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ரியல் மாட்ரிட் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இது குறித்து நேற்று நள்ளிரவுக்கு பின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பார்சிலோனா அணி கோமேனின் சேவைக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. அவரது தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பார்சிலோனா அணியின் முன்னாள் வீரர் க்ஸேவி ஹெர்னாண்டெஸ் மற்றும் மார்செல் கல்லார்டோ ஆகியோர் புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

லா லிகா தொடரில் தோல்வி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைண் அணியிடம் மோசமான தோல்வி போன்றவற்றின் மூலம், அவரால் முக்கியமான பெரிய போட்டிகளில் அணியை திறம்பட கையாள முடியவில்லை என்னும் சர்ச்சை எழும்பியது.

அவரது பயிற்சியின் கீழ் அணியின் முன்னணி வீரர்கள் பலர் தங்களுடைய நல்ல பார்ம் இல் இருந்து சரிந்துள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேற்றம் மற்றும் லா லிகா தொடரில் முதல் நான்கு இடங்களில் வரும் வாய்ப்புகள் குறைவு போன்ற தொடர் சரிவுகளே அவரின் இந்த நிலைமைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com