ஐரோப்பிய கால்பந்து தொடரில் புதிய சாதனை படைத்த போர்ன்மவுத்

ஐரோப்பா லீக் புள்ளிப் பட்டியலில் தனது தொடர் வெற்றிகளால் முதலிடத்தில் நீடிக்கிறது.
போர்ன்மவுத்
Published on: 

விகோ,

ஐரோப்பா லீக் கால்பந்து தொடரில் செல்டா விகோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ன்மவுத் அணி, புதிய சாதனை படைத்துள்ளது.

பின்தங்கிய நிலையில் இருந்து வெற்றி

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், போர்ன்மவுத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் செல்டா விகோ அணியின் இயாகோ அஸ்பாஸ் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கிடையே, 23-வது நிமிடத்தில் போர்ன்மவுத் வீரர் பபோட் டியாகிடே சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், போர்ன்மவுத் அணி மனம் தளராமல் போராடியது. 47-வது நிமிடத்தில் அல்வாரோ ரோட்ரிக்ஸ் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். தொடர்ந்து 78-வது நிமிடத்தில் ரயான் கோல் அடிக்க, போர்ன்மவுத் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 5 வெற்றிகள்

இந்த வெற்றியின் மூலம், ஐரோப்பிய கால்பந்து தொடரில் தான் விளையாடிய முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இங்கிலாந்து கிளப் என்ற சாதனையை போர்ன்மவுத் படைத்துள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் 5 வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று போர்ன்மவுத் 5-வது இடத்தில் உள்ளது. ஐரோப்பா லீக் புள்ளிப் பட்டியலிலும் தனது தொடர் வெற்றிகளால் முதலிடத்தில் நீடிக்கிறது.

X