ஊழல் வழக்கு விசாரணைக்காக பார்சிலோனா மாகாண கோர்ட்டில் நெய்மர் நேரில் ஆஜர்

நெய்மர் சாண்டோஸ் கிளப்பில் இருந்து 2013 ஆம் ஆண்டு விலகி பார்சிலோனாவுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பார்சிலோனா,

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர், சாண்டோஸ் கால்பந்து கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப்பில் இருந்து 2013 ஆம் ஆண்டு விலகி பார்சிலோனாவுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதில் ஒப்பந்தத்தில் ஊழலில் ஈடுபட்டதாக பிரேசிலின் முதலீட்டு நிறுவனமான டிஐஎஸ் அளித்த புகாரின் பெயரில் நெய்மர் உட்பட 9 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நெய்மர் மற்றும் அவரது தந்தை, சாண்டோஸ் கிளப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்த முறைகேட்டில் ஈடுப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வருகிறது. நீண்ட விசாரணையில் இருக்கும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்பெயினின் பார்சிலோனா கோர்ட்டில் நெய்மர் இன்று நேரில் ஆஜரானார். காலை 9:45 மணியளவில் பார்சிலோனா மாகாண கோர்ட்டில் தனது பெற்றோருடன் அவர் ஆஜரானார். விசாரணை முடிந்த பிறகு அவர் மதியம் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். கத்தாரில் அடுத்த மாதம் தொடங்கும் பிபா உலகக்கோப்பைக்கு முன்பே விசாணையின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com