சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா (ஸ்பெயின்) அணி, நியூ கேஸ்டிலை (இங்கிலாந்து) எதிர்கொண்டது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மாட்ரிட்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால் பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோ னாவில் நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் 16) ஆட்டம் ஒன் றில் பார்சிலோனா (ஸ்பெயின்) அணி, நியூ கேஸ்டிலை (இங்கிலாந்து) எதிர்கொண்டது.

முதல் பாதியில் இரு அணி களும் சரிசமமாக மல்லுக்கட்டினாலும், பிற்பாதியில் பார்சிலோனா ஆதிக் கம் செலுத்தியதுடன் கோல் மழை பொழிந்தது. முடிவில் பார்சிலோனா 7-2 என்ற கோல் கணக்கில் நியூகேஸ்டிலை தோற்கடித்தது. ஏற்கனவே அந்த அணிக்கு எதிரான முதலா வது ஆட்டத்தில் டிரா (1-1) கண்டிருந்த பார்சிலோனா ஒட்டுமொத்தத்தில் 8-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால்லிறுதிக்கு முன் னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com