

கவுதலஜாரா
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், கொலம்பியா மற்றும் காங்கோ அணிகள் முதல் பாதியின் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் எஸ்டாடியோ கவுதலஜாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்ற 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் காங்கோ அணிகள் விளையாடின.
இதில், போட்டியின் முதல் பாதியின் இறுதி வரை எந்த அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கொலம்பியா அணி 4 முறை பவுல் (விதி மீறிய ஆட்டம்) மற்றும் காங்கோ அணி 6 முறை பவுல் ஆடியது. முதல் பாதியின் முடிவில், ஆட்டத்தில் யாருக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.
போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி வீணானது. இதனால், 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளி பட்டியலில் கொலம்பியா மற்றும் காங்கோ அணிகள் முறையே 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் உள்ளன.