கொலம்பியா கால்பந்து வீரர் ரோட்ரிக்ஸ் ஓய்வு

ரோட்ரிக்ஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கொலம்பியா கால்பந்து வீரர் ரோட்ரிக்ஸ் ஓய்வு
Published on

பகோட்டா,

கொலம்பியா கால்பந்து வரலாற்றில் சிறந்த நடுகள வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் 'பல ஆண்டுகள், போட்டி கள், மகிழ்ச்சியான தருணங்கள், கடினமான காலக்கட்டங்கள். இப்போது எனது வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தை அதாவது கொலம்பியா அணியுடனான எனது பயணத்தை முடித்துக் கொள்ளும் தருணம் வந்து விட்டதாக உணர்கிறேன். கொலம்பியா சீருடையை அணிந்து ஆடுவது எனது கனவு. அதிர்ஷ்டவசமாக உலகக் கோப்பை போட்டிகள், கோல்கள், மறக்க முடியாத இரவுகள், நம்ப முடியாத வெற்றிகள், எங் களை வலிமையாக்கிய தோல்விகள் என அனைத்தையும் அனுபவித்து விட்டேன். 10-ம் நம்பர் ஜெர்சியும், அணியை வழிநடத்தியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்' என்று கூறியுள்ளார்.

35 வயதான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2011-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இது வரை 131 ஆட்டங்களில் விளையாடி 31 கோல்கள் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து தங்க ஷூவை வென்றது அவரது கால்பந்து வாழ்க்கையில் முக்கிய தருணமாக அமைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com