ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மரடோனா வீடு திரும்பினார்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மரடோனா வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மரடோனா வீடு திரும்பினார்
Published on

பியூனஸ் அயர்ஸ்:

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்து ரத்த உறைவு அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த மரடோனா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். தற்போது அவர் தனது மகளின் வீட்டில் தங்கி இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com