உலகக் கோப்பையில் நிகழ்ந்த அதிசயம்...என்ன தெரியுமா ?

4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.
உலகக் கோப்பையில் நிகழ்ந்த அதிசயம்...என்ன தெரியுமா ?
Published on

வாஷிங்க்டன்,

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்), 3-வது சுற்று போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில், 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதன்மூலம் கால்பந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்திருக்கும் அணிகள், முதல்முறையாக ஒரே நேரத்தில் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு தகுதிபெற்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

பிபா தரவரிசையில் பிரான்ஸ் முதலிடத்திலும், ஸ்பெயின் 2வது இடத்திலும், அர்ஜென்டினா 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com