

வாஷிங்டன்,
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை மொத்தம் 6.175 கிலோ எடை கொண்டது.
23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. தொடரானது ரவுண்ட் 32, ரவுண்ட் 16, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு தங்கத்தால் ஆன உலகக்கோப்பை வழங்கப்படும். இந்த கோப்பையின் மதிப்பு, கடந்த உலகக்கோப்பையை காட்டிலும் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை மொத்தம் 6.175 கிலோ எடை கொண்டது. 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இது 4.93 கிலோ தங்கத்தை உள்ளடக்கியது. தற்போது தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக எகிறுவதால் முந்தைய போட்டி நடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கோப்பையின் மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.6.75 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.