தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணி 2-வது வெற்றி

தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை அணி 2-வது வெற்றி பெற்றுள்ளது.
தூரந்த் கோப்பை கால்பந்து: மும்பை அணி 2-வது வெற்றி
Published on

கொல்கத்தா,

131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (பி பிரிவு) மும்பை சிட்டி அணி, ராஜஸ்தான் யுனைடெட்டை எதிர்கொண்டது.

இதன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5-1 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இதேபோல் கவுகாத்தியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டி பிரிவு) ஒடிசா அணி 3-0 என்ற கோல் கணக்கில் டெல்லியை சாய்த்து தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com