

வாஷிங்டன்,
உலகக்கோப்பை கால்பந்தில் ஜெர்மனிக்கு எதிரான வெற்றியை குடும்பத்துடன் கொண்டாடிய ஈகுவடார் பயிற்சியாளர் செபாஸ்டின் பிகாசின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனி - ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வலிமையான ஜெர்மனி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிறப்பான ஆட்டத்தால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஈகுவடார் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்குள் ஈகுவடார் நுழைந்தது.
ஜெர்மனியை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஈகுவடார் பயிற்சியாளர் செபாஸ்டின் பிகாசி மைதானத்தில் இருந்த தனது குடும்பத்தினரை நோக்கி ஓடிச்சென்றார்.
மைதானத்தில் குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்த இருக்கை பகுதிக்கு ஏறிச்சென்ற செபாஸ்டின் குடும்பத்தினரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரகி வருகிறது.