பீலேவின் சாதனையை தகர்த்த இங்கிலாந்து கால்பந்து கேப்டன் கனே

13 உலகக்கோப்பை கோல்களுடன் பீலேவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

பீலேவின் சாதனையை தகர்த்த இங்கிலாந்து கால்பந்து கேப்டன் கனே
Published on

அட்லாண்டா

பிரேசில் வீரர் பீலேவின் சாதனையை இங்கிலாந்து அணி கால்பந்து கேப்டன் ஹாரி கனே தகர்த்துள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா மைதானத்தில் நடந்த காங்கோ மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, 7-வது நிமிடத்தில் காங்கோ அணியின் வீரர் பிரையன் சிபெங்கா, முதல் கோலை போட்டு இங்கிலாந்துக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

பீலேவின் சாதனை சமன்

எனினும், போட்டியின் 75-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கனே கோல் அடித்ததும், சற்று ஆறுதல் ஏற்பட்டது. உலகக்கோப்பையில் கனேவின் 12-வது கோல் இதுவாகும். அதனால், பிரேசில் வீரர் பீலேவின் சாதனை சமன் செய்யப்பட்டது.

16 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்த பீலே 3 முறை கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் வைத்துள்ளார்.

முன்னணி கோல் வீரர்

இதில், பீலேவின் 12 கோல்களை சமன் செய்த கனே, 11 நிமிடங்களுக்கு பின்னர் மற்றொரு கோலை போட்டார். இதனால், 13 உலகக்கோப்பை கோல்களுடன் பீலேவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டுக்கான, எல்லா காலங்களிலும் முன்னணி கோல் வீரரான கேரி லைன்கெர்ரையும் கனே முந்தியுள்ளார். இதுதவிர, சர்வதேச போட்டி தொடர்களில் 20 கோல்களும், தன்னுடைய நாட்டுக்காக 84 கோல்களும் அடித்தவராகவும் அவர் உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com