ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி - கோப்பையை வென்றது மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
Image Courtesy : @ChampionsLeague twitter
Image Courtesy : @ChampionsLeague twitter
Published on

இஸ்தான்புல்,

கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் நேற்று முன்தினம் இரவு துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.

முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com