ஐரோப்பிய மகளிர் லீக் கால்பந்து: அர்செனல் எப்.சி.சாம்பியன்

image courtesy:twitter/@UEFA
அர்செனல் தரப்பில் ஸ்டினா பிளாக்ஸ்டீனியஸ் வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
லிஸ்பன்,
ஐரோப்பிய நாடுகளில் உள்ள மகளிர் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான யுஇஎப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி போர்ச்சுகலில் உள்ள எஸ்டாடியோ ஜோஸ் அல்வலடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், அர்செனல் எப்.சி. - பார்சிலோனா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் எப்.சி. கடைசி நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அர்செனல் எப்.சி. தரப்பில் ஸ்டினா பிளாக்ஸ்டீனியஸ் வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
Related Tags :
Next Story






