

லிவர்பூல்,
பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று ஆன்பீல்டு மைதானத்தில் நடைபெறும் லிவர்பூல் - மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நடப்பு பிரீமியர் லீக் சீசனில் விளையாடிய முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 15 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளநிலையில், அடுத்ததாக அந்த அணி லிவர்பூலை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி குறித்து ஹாலாண்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.
லிவர்பூல் அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசிய ஹாலாண்ட், சால்ஸ்பர்க் மற்றும் டார்ட்மண்ட் அணிகளில் விளையாடிய காலத்திலேயே மான்செஸ்டர் சிட்டி - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆன்பீல்டு மைதானத்தில் விளையாடுவது எப்போதும் தனித்துவமான அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், அங்கு வெற்றி, சமன், தோல்வி என அனைத்து அனுபவங்களையும் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இறுதியாக, “லிவர்பூலுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியும் மிகவும் சிறப்பானது” என்று ஹாலாண்ட் தெரிவித்துள்ளார்.