உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பாக நடந்த கனடா - போஸ்னியா ஆட்டம் டிரா

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் போஸ்னியா வீரர் ஜோவோ லுகி கோல் அடித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பாக நடந்த கனடா - போஸ்னியா ஆட்டம் டிரா
Published on

கனடா,

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கனடா - போஸ்னியா மோதல்

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா - போஸ்னியா அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் போஸ்னியா வீரர் ஜோவோ லுகி கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா முன்னிலை வகித்தது.

இதையடுத்து, ஆட்டத்தில் 2வது பாதியில் கனடா கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன்படி, ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கனடா வீரர் செலி லரின் கோல் அடித்தார். இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடின. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் கனடா, போஸ்னியாவுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் தலா 1 புள்ளியுடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் கனடாவும், 2வது இடத்தில் போஸ்னியாவும் உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com