உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பின் உச்சம்... கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா

17வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் கோல் அடித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பின் உச்சம்... கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா
Published on

வாஷிங்டன்,

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கத்தார் - சுவிட்சர்லாந்து

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பெரெல் எம்பலோ கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றது. இதையடுத்து கோல் அடிக்க கத்தார் முயற்சித்தது. அந்த முயற்சிகளை சுவிட்சர்லாந்து முறியடித்தது.

90 நிமிடங்கள் நிறைவடைந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து முன்னிலை வகித்தது. இதையடுத்து, ஆட்டத்தில் 8 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் கத்தார் வீரர் பவுலிம் கொஹ்கி கோல் அடித்தார். இதனால், 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. இதையடுத்து, இரு வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் பரபரப்பாக நடந்த கத்தார், சுவிட்சர்லாந்து ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com