

மெக்சிகோ சிட்டி,
உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.
அதன்படி, உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடக்க விழாவுடன் மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டியில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா மோதன. ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் கோல் அடித்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் மற்றொரு மெக்சிகோ வீரர் ரவுல் ஜெமிஸ் மற்றொரு கோல் அடித்தார். அதேவேளை, தென் ஆப்பிரிக்க வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் மெக்சிகோ வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றிபெற்றது.
நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து, கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா - செக் குடியரசு மோத உள்ளன. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.