பிபா கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி… டிக்கெட் விலை கடும் உயர்வு

இந்த திடீர் விலை உயர்வு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிபா கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி… டிக்கெட் விலை கடும் உயர்வு
Published on

சென்னை,

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இறுதிப் போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை சுமார் ரூ.9.20 லட்சம் வரை உயர்ந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.8 லட்சத்திற்கு விற்பனையாகியிருந்த இறுதிப் போட்டி டிக்கெட், தற்போது சுமார் 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - பி.எஸ்.ஜி., அட்லெட்டிகோ அணிகள் வெற்றி
பிபா கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி… டிக்கெட் விலை கடும் உயர்வு

முன்னதாக 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான ஆரம்ப டிக்கெட் விலை சுமார் ரூ.1.48 லட்சம் ஆக இருந்த நிலையில், இப்போது அதனை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. புதிய பிரீமியம் பிரிவுகள் மற்றும் அதிக விலைகள் காரணமாக, கால்பந்து போட்டிகளை நேரில் காண விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர ரசிகர்களுக்கு இது எட்டாக்கனியாக மாறியுள்ளது.

2026 பிபா உலகக்கோப்பை போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com