உலகக் கோப்பை கால்பந்து: நாக்-அவுட் சுற்றுக்கு முதல் டிக்கெட்டை தட்டி சென்ற மெக்சிகோ

நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக மெக்சிகோ சாதனை படைத்தது.
உலகக் கோப்பை கால்பந்து: நாக்-அவுட் சுற்றுக்கு முதல் டிக்கெட்டை தட்டி சென்ற மெக்சிகோ
Published on

குவாடலஜரா,

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் முதல் அணியாக நாக்-அவுட் சுற்றுக்கு மெக்சிகோ முன்னேறியுள்ளது.

மெக்சிகோ - தென்கொரியா மோதல்

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

கோல் இல்லை

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறியதால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.

ரோமோ கோலால் முன்னிலை

2-வது பாதி தொடங்கியதும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

கோல் கணக்கில் பின்தங்கிய தென்கொரியா அணி சமநிலை கோலை தேடி தீவிரமாக போராடியது. ஆனால் மெக்சிகோ வீரர்களின் உறுதியான தற்காப்பு ஆட்டத்தால் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து 2-வது வெற்றி

இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்த மெக்சிகோ, குரூப்-ஏ பிரிவில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. மெக்சிகோ அடுத்த ஆட்டத்தில் செக் குடியரசை எதிர்த்தாடவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com