

வாஷிங்டன்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா, அறிமுக அணியான ஜோர்டானை எதிர்கொண்டது. 28 ஆண்டுக்கு பிறகு உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ஆஸ்திரியா ஆரம்பம் முதலே தாக்குதல் யுக்தியில் கவனம் செலுத்தியது.
முடிவில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக் கில் ஜோர்டானை வீழ்த்தி 3 புள்ளிகளை பெற்றது. உலகக் கோப்பையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடை சியாக 1990-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது.