உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியாவை எதிர்கொள்ளும் கனடா

இந்த மெகா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது.
உலகக் கோப்பை கால்பந்து:  போஸ்னியாவை எதிர்கொள்ளும் கனடா
Published on

டொராண்டோ,

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த மெகா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது.

போட்டியின் 2-வது நாளான இன்று டொராண்டோவில் நடக்கும் லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) கனடா அணி, போஸ்னியாவை எதிர்கொள்கிறது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை சொந்த மண்ணில் தொடங்குவதற்கு அல்போன்சோ டேவிஸ் தலைமையிலான கனடாவுக்கு இது அருமையான வாய்ப்பாகும்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யுனைட் 8 ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com