

மியாமி,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மியாமியில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற தவறின. மேலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்ததால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது.
2-வது பாதியிலும் முதல் கோலை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. ஆனால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் வீரர்களின் உறுதியான தற்காப்பும், கோல்கீப்பர்களின் அபாரமான சேவ்களும் காரணமாக எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.