உலகக் கோப்பை கால்பந்து திருவிழா - கானாவை வீழ்த்தி குரோஷியா அசத்தல்

குரோஷியா அணி, கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
குரோஷியா
Published on

பிலடெல்பியா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி, கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதல் பாதி

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே குரோஷியா அணி ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தனது வசம் வைத்திருந்தது.

அதன் பலனாக, 31-வது நிமிடத்தில் பெட்டார் சுசிச் கோல் அடித்து குரோஷியாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார். அதன்பிறகு கானா சமநிலை கோலுக்காக போராடிய போதிலும், முதல் பாதி முடிவில் குரோஷியா 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி

2-வது பாதியில் கானா தனது தாக்குதல் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. அதன் பலனாக ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் டெரிக் லுக்காசென் தனது முதல் கோலை பதிவு செய்து அணியை சமனிலை படுத்தினார். அதனைத் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய குரோஷியாவுக்கு 83-வது நிமிடத்தில் நிக்கோலா விளாசிச் கோல் அடித்து மீண்டும் அணியை முன்னிலை படுத்தினார்.

வெற்றி

தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க பல வாய்ப்புகளை உருவாகியபோதிலும் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் குரோஷியா அணி, கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com