உலகக் கோப்பை கால்பந்து திருவிழா : எகிப்து - ஈரான் ஆட்டம் டிரா

இந்த லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா : எகிப்து - ஈரான் ஆட்டம் டிரா
Published on

சியாட்டில்,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜி' பிரிவில் எகிப்து - ஈரான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

மின்னல் வேகத்தில் முன்னிலை

இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு சியாட்டிலில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலேயே எகிப்து வீரர் மஹ்மூத் சாபர் கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

பின்னடைவை சந்தித்த ஈரான் அணிக்கு 14-வது நிமிடத்தில் ராமின் ரெசையன் கோல் அடித்தார். இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும், 1-1 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிந்தது.

2-வது பாதி

2-வது பாதியில் வெற்றிக்கான கோலை அடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன. இருப்பினும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் கோல்கீப்பர்களின் சிறப்பான செயல்பாடும் காரணமாக மேலும் எந்த கோலும் பதிவாகவில்லை.

தலா ஒரு புள்ளி

இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த 'ஜி' பிரிவு லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் எகிப்து மற்றும் ஈரான் அணிகள் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன

X

Daily Thanthi
www.dailythanthi.com