உலகக் கோப்பை கால்பந்து: வரலாறு படைக்க காத்திருக்கும் மெஸ்ஸி, எம்பாப்பே

அதிக கோல்கள் அடித்தவர் ஓய்வு பெற்ற ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ்.
உலகக் கோப்பை கால்பந்து: வரலாறு படைக்க காத்திருக்கும் மெஸ்ஸி, எம்பாப்பே
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. அவை 12 பிரி வாக பிரிக்கப்பட்டுள்ளன. அணிகள் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் ஓய்வு பெற்ற ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ். அவர் 24 ஆட்டங்களில் 16 கோல்கள் அடித்து முதலிடத்திலும், பிரேசிலின் ரொனால்டோ 2-வது இடத்திலும் (15 கோல்) உள்ளனர்.

இந்த நிலையில், குளோசின் சாதனை அனேகமாக இந்த தடவை காலி யாகி விடும். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி (13 கோல், 26 ஆட்டம்) பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே (12 கோல், 14 ஆட்டம்) ஆகியோர் அவரை முந்துவதற்கு வாய்ப்புள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com