உலகக் கோப்பை கால்பந்து: பராகுவே - ஆஸ்திரேலியா ஆட்டம் கோல் இன்றி டிரா

இந்த லீக் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: பராகுவே - ஆஸ்திரேலியா ஆட்டம் கோல் இன்றி டிரா
Published on

சான் பிரான்சிஸ்கோ,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'டி' பிரிவு லீக் ஆட்டத்தில் பராகுவே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி கோல் ஏதும் இன்றி டிராவில் முடிந்தது.

முதல் பாதி

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டதால் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா

பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் ஆஸ்திரேலியா 61 சதவீத ஆதிக்கம் செலுத்தியது. மேலும், துல்லியமான 'பாஸ்'கள் மூலம் ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இருப்பினும் அந்த அணியால் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றமுடியவில்லை.

போராட்டம்

இரண்டாவது பாதியில் வெற்றிக்கான கோலை அடிக்க பராகுவே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தின. இருப்பினும், இரு அணிகளின் தற்காப்பு சிறப்பாக இருந்ததால் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

தலா ஒரு புள்ளி

இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது. இதன் மூலம் பராகுவே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com