உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்காவில் நுழைய சோமாலியா நடுவருக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.
உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்காவில் நுழைய சோமாலியா நடுவருக்கு அனுமதி மறுப்பு
Published on

வாஷிங்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 52 போட்டி நடுவர்களில் ஓமர் ஆர்டனும் (சோமாலியா) ஒருவர். 2025-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றார். சோமாலியா நாட்டில் இருந்து உலகக் கோப்பையில் பணியாற்றப்போகும் முதல் நடுவர் என்ற பெருமையை பெறும் கனவோடு அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். அவரிடம் முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இருந்த போதிலும், அமெரிக்க குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரின் கூடுதல் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், துருக்கிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

சோமாலியா நாட்டினர் வருவதற்கு அமெரிக்கா நிறைய பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச கால்பந்து சம்மேளனமும் போட்டியை நடத்தும் நாட்டின் விசா நடை முறை மற்றும் குடியுரிமையில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com